அனுராதபுர ஆஸ்பத்திரி கழிவுகளால் சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்..!
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் கழிவுகள் மற்றும் சிறுநீர் அடங்கிய கழிவுகளை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவதால் அப்பகுதியில் ஏராளமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நகரின் மத்திய வடிகால் அமைப்பு வழியாக அனுராதபுரம் மல்வத்து ஓயா வில் கலப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலை காரணமாக வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மல்வத்து ஓயா வில் கலக்கும் இந்த மாசுபட்ட நீர் பிரதேச வாசிகளும் அங்கு குளிப்பதற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும் என்றும் பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டினர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மனிதகுலம் பாதுகாப்பிற்கான தேசிய அமைப்பின் தலைவர் வணக்கத்துக்குரிய அனுராதபுரம் சோமரத்ன தேரர் இந்த பிரச்சினையை தீர்க்க பொறுப்பு வாய்ந்தவர்கள் உடனாடியாக செயல்படாவிட்டால் விரைவில் இந்தப் பகுதியில் பல சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)