சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத்..! அவரது நினைவுப் பேருரை நாளை..!
தேசமாண்ய கலாநிதி பதியுதீன் மஹ்மூத்
(23 ஜூன் 1904 – 16 ஜூன் 1997)
காயிதே மில்லத் மறைந்த கலாநிதி பதியுதீன் இலங்கை முஸ்லிம்களின் மிகச் சிறந்த அரசியல் தலைவராவார். இன்னும் ஒரு கல்லூரியைத் தோற்றுவித்த அதிபராக, ஒரு கல்விமானாக மட்டுமன்றி, கல்வி, ஒலிபரப்புத் துறை, சுகாதாரம், வீடமைப்பு முதலான விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் ஒரு ராஜதந்திரியாகவும் பணியாற்றிய ஒரு ஆளுமையாவார்.
இவர் தொடர்பாக அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் கொழும்பிலுள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை நினைவுப் பேருரையொன்றை நடத்தவுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் வாழ்வும் சமூகப் பணியும் தொடர்பாக ஆராய்வது பொருத்தமாகும்.
இவர் 1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி முஹம்மத் நைனா மரிக்கார்-பாதிமா நாச்சியா தம்பதியினரின் 12 ஆவது குழந்தையாக மாத்தறையில் பிறந்தார் சன்மார்க்கப் பற்றும் நன்மதிப்பையும் பெற்ற நிலபுலன்களுக்கு உரிமை கோரும் குடும்பத்திலே பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை மாத்தறையிலும் காலியிலும் பெற்று உயர் வகுப்புகளுக்காக கொழும்பு ஸாஹிராவுக்கு வருகிறார். படிக்கும் காலத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சமமாக ஆர்வம் காட்டினார். அடுத்து உயர் பட்டப் படிப்புக்காக இந்தியாவின் அலிகார் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார்.
1931 முதல் 1937 வரையான காலப் பகுதியில் அலிகாரில் படிக்கும் காலத்தில் இவரின் விவாதத் திறனுக்காக 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய பொதுப் பேச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். பல்கலைக்கழக இதழின் ஆசியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதுடன் அலிகார் ஒக்ஸ்போர்ட் மெஸ்டன் பரிசையும் வென்றார் இது தவிர உ.பி. பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவராகவும் 1935ம் ஆண்டு ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லக்னோவில் நடந்த அகில இந்திய மாணவர் மாநாடுகளுக்கு அவர் தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் இயக்கத்தை எற்பாடு செய்தார். பதியுதீன் மஹ்மூதின் பேராசிரியரும், தலைமை ஆசிரியருமான முஹம்மத் ஹபீப், தனது மாணவரைப் பற்றி இவ்வாறு விவரித்தார்.
பதியுதீன் 1932 முதல் ஒரு மதிப்புமிக்க மாணவர், தோழர் மற்றும் நண்பர் என எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது கல்வி வாழ்க்கை விதிவிலக்காக அற்புதமானது. பதியுதீன் இரண்டு ஆண்டுகள் (1933-35) என்னுடன் அரசியல் பயின்றார். அவர் மிகவும் நம்பிக்கைக்குரிய மாணவராக, ஆசிரியர்களுக்கு உத்வேகமாக இருக்கும் அரிய, ஆனால் மிகவும் வரவேற்கத்தக்க மாணவர்களில் ஒருவராக என்னைக் கவர்ந்தார். அலிகாரில் சில மாணவர்கள் மட்டுமே தங்கள் திறன்கள் மற்றும் குணாதிசயங்கள் குறித்து இவ்வளவு சிறந்த தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அவரது அறிவார்ந்த சாதனைகள், சிறந்த நடத்தைகள் வியக்கதக்கவை.
அலிகாரில் சேர்ந்தபோது, லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் முஸ்லிம் தலைவர்களை இந்திய சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க மஹ்மூத் வற்புறுத்தினார்.
முதுநிலைப்பட்டதாரியான இளைஞர் பதியுதீன் தன்னை சமூக முன்னேற்றப் பணியில் ஈடுபடுத்திக் கொள்கிறார். முஸ்லிம் லீக் என்ற சமூகநல அமைப்பு அவரை அரவணைத்துக் கொள்கிறது. மிகக் குறுகிய காலத்திலே 1927ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கின் செயலாளர் பதவி இவரை அலங்கரிக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான சமகாலப் பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அக்காலத் தலைவர்களை ஒன்று திரட்டி தீர்வுகாணும் வழிமுறையொன்றை ஆரம்பித்து வைத்தார்.
பிரபுக்களும் செல்வந்தர்களும் மட்டுமல்லாது சதாரண பொது மகனும் முஸ்லிம் லீக்கில் உயர் பதவி வகிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கினார்.
1939 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் அரசியல் மாநாட்டைக் கூட்டி சமூகத்தின் உரிமைகள் தொடர்பாக குரல் கொடுக்கும் கலாசாரமொன்றை உருவாக்கினார். ஒரு சமூகம் நாட்டின் முன்னேற்றத்துக்காக அதன் முறையான பங்களிப்பை வழங்குவதற்கு அந்த நாட்டு அரசு குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் உரிமைகளை வழங்க வேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தினார். மேலும் அவர் அரசியலுக்கு வர முன்னரே சமூகத்துக்கு விளிப்புக் குரலெழுப்பினார்.” 1938 ம் ஆண்டில் காலி முகத்திடலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான வைபவமொன்றில் இவர் நிகழ்த்திய உரையில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கள மொழி அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்பதால், இலங்கை முஸ்லிம்கள் சிங்கள மொழியையும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டி வரும் என எதிர்வு கூறினார்.
இது செய்யப்பட்டால் சிங்களவர் மத்தியில் முஸ்லிம் தொடர்பான அனைத்துத் தவறான புரிதலும் ஒழிக்கப்பட்டு இரு சமூகத்துக்கிடையே சரியான நல்லிணக்கம் ஏற்படும் என்பதை வலியுறுத்தினார்.
அதே ஆண்டு காலி முகத்திடலில் முஸ்லிம்களின் பிரமாண்டமான கூட்டமொன்றைத் திரட்டி பலஸ்;தீன மக்களுக்கு பிரிட்டன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனக் கோசம் எழுப்பினார்.
இனி, தேசிய அரசியலில் இவரின் பங்களிப்பு தொடர்பாக அவதானிக்கும் போது, ளுறுசுனு பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த வேளையில் அவருக்குப் பக்க பலமாக நின்று முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்துக்கு வித்திட்டார். வகுப்பு வாரியான பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக இலங்கை அரசியலில் சனத்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்து வெற்றியும் கண்டார். இதன் மூலம் சிறுபான்மையும் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்கள் மட்டுமன்றி மலையக தமிழ் மக்களும் கூட நன்மையடைந்தனர். தேசிய மற்றும் சமூகம்சார் அரசியலுக்கு இவர் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
இவர் சுதந்திரக் கட்சி ஆட்சி பீடமேறிய காலங்களில் தனது செல்வாக்கையும் மதிநுட்பத்தையும் பயன்படுத்தி சமூகத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கம் களமமைத்தார்.
1960 ஆம் அண்டு பதியுதீன் மஹ்மூத் கல்வி, ஒலிபரப்பு அமைச்சராகப் பதவியேற்றார். இலங்கை வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சிக்கான பிரிவொன்றை ஆரம்பிக்கப் பணிப்புரை வழங்கி, அதனை செயற்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இன்றும் இலங்கையில் மட்டுமல்லாது தென் இந்தியாவின் சில பகுதிகளிலும் நாம் காலை-மாலை அனுபவிக்கும் முஸ்லிம் சேவை பதியுதீன் மஹ்மூத் அவர்கள் பெற்றுத் தந்த உரிமையாகும்.
தான் ஒலிபரப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் ஹஜ் பெருநாள் தினத்தில் உரையொன்றை நிகழ்த்தினார். உரைக்கு முன் அவரே தக்பீர் முழங்கினார்.
1950, 60ஆம் தசாப்த காலங்களில் முஸ்லிம்கள் அரசியலில் ஈடுபடுவது அவசியமற்ற ஒன்றாகும் என முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் நம்பிய காலம். இஸ்லாமிய சோசலிஸ முன்னணி என்ற துணைக் கட்சியை உருவாக்கி, நாடு பூராகவும் கிளைகளை தோற்றுவித்து முஸ்லிம்களை கௌரவமான அரசியலில் ஈடுபட ஆர்வமூட்டினார்.
இன்னும் சுதந்திரக் கட்சியின் தோற்றத்துக்கும் அக்கட்சி பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கவும் பதியதீன் மஹ்மூதின் ஸாஹிரா வளாகத்துடன் இணைந்த (கம்பளை) வீடே பயன்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக 1972ஆம் ஆண்டு கம்பளை ஸாஹிராவில் அமைச்சர் ரீ.பி. இலங்கரத்தின இவ்வாறு சாட்சி பகர்கிறார்.
இந்த ஸாஹிரா வளாகம்தான் எமது சுதந்திரக் கட்சியை உருவாக்கவும், கட்சியை உண்ணத நிலைக்குக் கொண்டு வரவும் பல திட்டங்களைத் தீட்டுவதற்கும் களமாக அமைந்தது. நவீன சமுதாயத்தை உருவாக்க நல்ல பல திட்டங்களும் இவ்விடத்திலேயே உருப்பெற்றவையாகும்.
அவற்றின் மூலமே இந்நாட்டு மக்களுக்கு நாம் சேவை செய்ய பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் வளர்ந்தோம்” இத்தனை பெருமைக்கும் ~பதியே| காரணமாகும்” என பலமாகக் கூறினார்.
அவர் கல்வி அமைச்சராகப் பதிவியேற்றதும் வகுப்பு வாரியான முறைமைக்குப் பதிலாக சனத்தொகை அடிப்படையிலான விகிதாசார முறையை செயற்படுத்தி முஸ்லிம் கல்விமான்களின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.
அக்காலத்தில் அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் கலவன் பாடசாலை என்ற பெயரிலே முஸ்லிம் பாடசாலைகள் செயற்பட்டு வந்தது. அவை முஸ்லிம் வித்தியாலங்களாகவும் மகா வித்தியாலயங்களாகவும் மாற்றப்பட்டு சமய அடிப்படையிலான ஒழுக்க விழுமியங்கள் பேணப்பட்டதால் முஸ்லிம் பெண்களும் பாடசாலைக் கல்வியை நோக்கிப் படையெடுத்தனர்.
ஆளணித் தேவைக்காக புதிதாக முஸ்லிம் அதிபர்களும் ஆசிரியர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பள்ளிவாசலோடு மட்டும் இருந்த உலமாக்கள் இஸ்லாம் பாட போதனைக்காக நியமிக்கப்பட்டார்கள். பாடசாலைக் கல்வி மட்டும் போதுமானது என்ற நிலைப்பாட்டிலிருந்து முஸ்லிம் வாலிபர்களும் யுவதிகளும் பட்டப் படிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெருமையும் பதியின் கல்வித் திட்ட வெளிப்பாடாகும்.
காயிதே மில்லத்தின் கல்விக்கான பங்களிப்பு தொடர்பாக கதைக்கும்போது கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் வளர்ச்சியோடு தொடர்புபடுத்தியே உற்றுநோக்குவது பொருத்தமாகும். ஏனெனில் பதியுதீன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை ஆராயும்போது அவரின் வாழ்க்கையின் பெரும் பகுதி கம்பளை ஸாஹிராவுடனே கழிந்துள்ளது.
அன்னார் சர்வதேச ராஜதந்திரியாப் பணியாற்றும்போது அதாவது நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதியாகக் கடமையாற்றும் வேளையில் தமது ஆசனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த இலங்கையின் பிரதிநிதி கலாநிதி பதியுதீன் மஹ்மூத் எனும் சுட்டிப் பெயர் பலகையில் முன்னால் கம்பளை ஸாஹிராவின் அதிபர் என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டிருந்தது. கம்பளை ஸாஹிரா அவரின் உயிர் மூச்சு என்பதை உணர்த்துகிறது.
அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பதவியேற்க இருந்த நிலையில் தான் கம்பளை ஸாஹிராவின் உப அதிபர் பதவியைப் பொறுப்பேற்கிறார்.
தனது அபிமான ஆசிரியர் ரீ.பி. ஜாயாவின் வேண்டுதலுக்கு அமைவாக 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ம் திகதி ஸாஹிராவின் உபஅதிபர் ஆசனத்தை அலங்கரிக்கிறார்.
1944 ஆம் ஆண்டில் கம்பளை டவுன் பள்ளிக்குச் சொந்தமான ஓலையால் வேயப்பட்ட ஒரு தற்காலிகக் கட்டிடத்தில் 167 மாணவர்களைக் கொண்டதே கம்பளை ஸாஹிராக் கல்லூரியாகும். அப்போது இப்பாடசாலை கொழும்பு ஸாஹிராவின் கிளையாகவே இயங்கியது. ஆனால், சொற்ப காலத்தில் பதியின் அயராத முயற்சியின் விளைவாக தனித்து இயங்கும் ஒரு பாடசாலையாக மாறுகிறது. அதன் நிலப்பரப்பை 4 ஏக்கராக விஸ்தரிக்கும் முயற்சியிலும் அவர் வெற்றி காணுகிறார்.
கம்பளையில் மட்டுமல்லாது அதனைச் சூழவுள்ள மக்களினதும் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களினதும் நன்மதிப்பையும் அன்புடன் கூடிய ஆதரவையும் திரட்டிய அதிபர் பதியுதீன் கம்பளையைச் சூழவுள்ள கிராமம் கிராமமாக சிலவேளைகளில் வீடு வீடாகச் சென்று, கல்வியின் அவசியத்தையும் இப்பகுதியில் தனித்துவமிக்க கல்லூரியொன்றைக் கட்டியெழுப்புவதன் தேவை பற்றியும் வலியுறுத்தி வந்தார்.
மாணவர் எண்ணிக்கை கூடுவதைப் போலவே பெண் மாணவிகளின் வருகையையும் அதிகரிக்கச் செய்ய பெண் மாணவிகளுக்கு ஒழுக்கமிகு சீருடையொன்றையும் அதிபர் அறிமுகப்படுத்துகிறார். கலாநிதி பதியுதீன் தனது முயற்சியை மேலும் தீவிரப்படுத்துகிறார்.
ஜும்ஆ நாட்களில் பள்ளிவாசல்களுக்குச் சென்று விளக்கமளித்தார். எதிர்காலத்தில் சமூகத்துக்குப் பயனுள்ள சிறந்த முஸ்லிம் கல்விமான்களை உருவாக்க வேண்டுமாயின் சகல வசதிகளுடன் கூடிய கல்லூரியொன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறிவந்தார்.
அதிபர் ~பதிக்கு” பல்வேறு எதிர்ப்புகள் தோன்றிய போதிலும் அவர் அவற்றைத் துச்சமாக மதித்து தனது இலச்சியப் பயணத்தைத் தொடர்ந்தார். பௌதிக வளத் தேவைகள் ஏற்படும் வேளைகளில் வர்த்தகப் பிரமுகர்கள் மூலம் உதவி கிடைத்த வண்ணமிருந்தன.
60ம் ஆண்டில் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கல்வி அசை;சராகப் பதவியேற்றபோது ஸாஹிராக் கல்லூரியின் பொற்காலம் உருவானது. என்றாலும் ஸாஹிராவுக்கு வழங்கும் வசதிகள் போலவே தமிழ் சிங்களப் பாடசாலைகளின் குறைகளையும் நீக்கினார்.
கல்லூரிக்குத் தேவையான கற்றலுக்கான நவீன உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் முதலான வசதிகளையும் பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல், அவரின் கனவுக்கேற்ப ஸாஹிரா வளவின் மலை உச்சியில் கம்பீரமான பள்ளிவாசலையும் அமைத்து, பாடசாலை நாட்களில் ஜும்ஆ தொழுகையையம் ஆரம்பித்து வைத்தார்.
இக்காலத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் முதலான மொழி மூல வகுப்புகள் நடத்தப்பட்டதால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது சிங்கள, தமிழ் மாணவர்களுக்கான கதவு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
கல்லூரியின் ஆளணியில் முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழர்கள், மலாயர்கள், பறங்கியர்கள் மற்றும் இந்தியர்கள் ஆசிரியர்களால் கல்வியாலும் ஒழுக்கத்தாலும் போஷிக்கப்பட்டு வந்தன. ஒழுக்கத்தாலும் போஷக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உயர் தர வகுப்புகள் கலை, விஞ்ஞானம், வணிகம், தொழிநுட்பம் மற்றும் விவசாய விஞ்ஞானம் முலான பல்வேறு துறைசார்ந்த வகுப்புகளு;ம் நடைபெற்றன. கல்வித் துறையிலும் சரி விளையாட்டுத் முதல் கலை இலக்கியத் துறையிலும் கொழும்பிலுள்ள முன்னணிப் பாடசாலைகளுடனே போட்டிகளில் ஈடுபட்டது.
இக்கல்லூரியின் பௌதிக வளர்ச்சியை உற்றுநோக்கினால் ~பதி” ஓர் அதிசய மனிதர் என்பது புலனாகும். 1944 ஆம் ஆண்டு முதல் 1960 வரையான சுமார் 15 வருட காலத்துக்குள் ஒரு ஓலைக் கொட்டிலில் ஆரம்பமாகி 15 வருடத்துக்குள் பலமான மாடிகளுடன் கூடிய 22 கட்டிடங்களாக வளர்ச்சி காண வைத்துள்ளார். 1997, ஜூன் 16 ஆம் திகதி அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றார்.
அவர் மறைந்தாலும் அவர் அமைத்த விசாலாமான ஸாஹிராவும் நாடு பூராகவும் உள்ள ஆளுமைகளும் சமூகத்தை மேலும் முன்னேரச் செய்வதில் பங்களிப்புச் செய்யும் என்பது நமது நம்பிக்கையாகும்.
தொகுப்பு: அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் ((SLAS – Rt)
முன்னாள் பணிப்பாளர் அரசாங்க தகவல் திணைக்களம்
ஆ.ர்.ஆ. நியாஸ் – முன்னாள் சமுர்த்தி திணைக்கள உயரதிகாரி,
பணிப்பாளர் இங்கை சமாதானப் பேரவை