கண்டி சித்திலெப்பை கல்லூரியில்முஹர்ரம் புத்தாண்டு நிகழ்ச்சி..!
முஹர்ரம் புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு கண்டி சித்திலெப்பை கல்லூரியில் வெள்ளிக்கிழமை (27) விசேட முஹர்ரம் நிகழ்வுகள் நடைபெற்றன .
கல்லூரி அதிபர் எம்.எம்.ஏ அலீம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு கண்டி கல்வித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் எம் .ஆர் ரிஸ்னி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கண்டி கட்டுகலை ஜும்ஆ மஸ்ஜித் கதீப் அஷ்ஷெய்க் இர்ஷாத் ரவாஹி முஹர்ரம் விசேட சொற்பொழிவை நிகழ்த்தினார் .
மாணவ மாணவிகளின் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றன
வலய மட்ட, மாகாண மட்டங்களின் பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசுகளும் மேடையில் வழங்கப்பட்டன.
(ரஷீத் எம். றியாழ்)