கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தம்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காம பிரதேச சபை பிரதித்தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் இன்று அனுப்பிவைக்கப்பட்டது .
மேலும் அவருடைய கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. என்று
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
(கே. எ. ஹமீட்)