வெகு விமரிசையாக நடைபெற்ற “மனச்சாட்சி” நூல் வெளியீட்டு நிகழ்வு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய “மனச்சாட்சி” என்ற நூல் கடந்த புதன்கிழமை (25) மாலை இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பல்லின மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஜனாதிபதி செயலாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் வரவேற்புரையை பாதில் பாக்கீர் மாக்கார் நிகழ்த்தினார். நூல் குறித்து ஓய்வுபெற்ற சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாலித பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர். நன்றியுரையினை இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நிகழ்த்தினார்.
















