உள்நாடு

போரா சமூகத்தினரின் வருடாந்த மாநாடு; ஆயிரக்கணக்கானோர் கொழும்பு வருகை

கொழும்பில் வாழும் போரா சமுகத்தினரினது வருடாந்த மத வழிபாடு மார்க்க சொற்பொழிவுகள் கலாச்சார சர்வதேச மாநாடு கடந்த ஜூன் 25 – ஜூலை 2 ஆம் திகதி முதல் பம்பலப்பிட்டிய வில் உள்ள போாரா பள்ளிவாசலில் நடைபெறுகின்றது.

இம் மாநாட்டுக்காக இந்தியா , பாக்கிஸ்தான், லண்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் வாழும் போரா சமுகத்தினர்கள் ஒன்பது ஆயிரம் பேர் கொழும்பை வந்தடைந்தனா். இம் மாநாட்டிற்கு போரா சமுகத்தினரின் தலைவர் கொழும்பில் தங்கியுள்ளார்.

குறிப்பாக குஜராத் , பாக்கிஸ்தான் நாட்டில் இருந்தே அனேகமானோர் கொழும்பில் ஒன்று கூடியுள்ளனர். குறிபபாக வர்த்தக சமூகத்தினரான போரா கொழும்பிலும் ஒர் இலட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது வருகையினால் கொழும்பில் உள்ள சகல சுற்றுலா ஹோட்டல்களிலும் அரைகள் ஒதுக்கப்பட்டு இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலம் அந்நியச் செலவானி வருமானமும் கிடைத்து வருகின்றது. சகல பாதுகாப்பு, போக்குவரத்து பொலிஸார் மற்றும் நீர், மின்சாரம், வாடகை வாகனம், உணவுப் பறிமாறல்கள் போன்ற சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துளளமை குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப். ஏ. சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *