திங்களன்று அவசரமாக கூட்டப்படும் பாராளுமன்றம்
அவசரக் கூட்டத்திற்காக பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை, 30 ஆம் திகதி கூடவுள்ளதென சபாநாயகர் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளின் பேரில், நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளையின்படி அவசரக் கூட்டம் கூட்டப்படும் என்று குறித்த வர்த்தமானியில் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் பட்ஜெட் தொடர்பான தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த அவசரக் கூட்டம் கூட்டப்படுவதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும், பணியாளர்கள் பிரிவின் தலைவருமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.