வாழைச்சேனை பொலிஸாரினால் உதைபந்துகள் வழங்கி வைப்பு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ் திணைக்களம் நாடளாவியா ரீதியாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதன் தொடரில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய உதைபந்து அணியினருக்கு வாழைச்சேனை பொலிஸார் உதைபந்துகளை (26) வியாழக்கிழமை அன்பளிப்பு செய்தனர்.
மாணவர்களின் உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதைபந்துகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி அலியார் அமீர் அலி, போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.கே.யூ.ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டு உதைபந்துகளை வழங்கி வைத்து போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை நிகழ்த்தினார்கள்.
பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாடசாலை உடற்கல்வி ஆசிரியர், எச்.எம்.பஹாஸ்தீன், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் ஏ.ஏ.இர்பான், ஆசிரியர் எம்.எம்.அர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



(எச்.எம்.எம்.பர்ஸான்)