புலமையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மல்வானை அல் முபாரக்கில் பாராட்டு.

கடந்த 2024 ம் ஆண்டில் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளியைத் தாண்டி சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு (2025.06.17) செவ்வாய்க்கிழமை பாடசாலைக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப் பரிசில்களும் ஞாபகச்சின்னங்களும் 100 புள்ளிகளைத் தாண்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு நெறிப்படுத்தி வழிகாட்டிய ஆசிரியப் பெருந்தகைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
