பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும்.நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச் செய்யவும் மனித உரிமை உயர் ஸ்தானிகர் அரசிடம் வேண்டுகோள்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மிக விரைவாக நீக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோலகர் ட்ரக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அரசியற்கைதிகளை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டம் இரத்து செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்குவது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்துவருகின்றோம்- என்றார்.