கண்டியில் சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகருக்கு கௌரவம்

கண்டி கல்வி வலயத்திலும் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திலும் சிறந்த சேவையாற்றி இன்றைய தினத்திலிருந்து (27) ஓய்வு பெறும் சிரேஷ்ட ஆசிரிய ஆலோசகர் எம் ஆர் எம் ரிஸ்னி கண்டியில் கௌரவிக்கப்பட்டார்
கண்டி சித்திலெப்பை கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்விலேயே இவர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கல்லூரி அதிபர் எம் ஏ எம் அலீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடந்த 34 ஆண்டு காலமாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திலும் கண்டி கல்வி வலயத்திலும் பல பாடசாலைகளிலும் உடற் கல்வி, விளையாட்டுத்துறைக்காக இவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி பேசப்பட்டது.
இந்த நிகழ்வில் கண்டி சித்திலெப்பை கல்லூரியின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் இங்கு இடம் பெற்றன.
(ரஷீத் எம். றியாழ்