கடமைகளைப் பொறுப்பேற்ற பேருவளை பிரதேச சபைத் தலைவர் பைஸான் நைஸர்
பேருவளை பிரதேச சபையின் தவிசாளரார் பைஸான் நைஸர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
பேருவளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பைஸான் நைஸர் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வு இன்று 26ஆம் திகதி அளுத்கமையில் அமைந்துள்ள பேருவளை பிரதேச சபையின் புதிய கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி கட்சிகள் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜெமீல், முன்னால் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னால் அமைச்சர் பியல் நிசாந்த, முன்னால் மாகாணசபை உறுப்பினர் செனால் வெல்கம, முன்னால் மாகாணசபை உறுப்பினர் பிரசன்ன சங்ஜீவ, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஸலீம், முன்னால் மாகாண சபை உறுப்பினர் அம்ஜாட், ஐக்கிய மக்கள் சக்தி உபபொருலாளர் ரூமி ஹாஷிம் மற்றும் முன்னால் பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தார்கள்.
பைஸான் நைசர் அவர்கள் 34 வருடங்களுக்கு பிறகு தெரிவு செய்யப்பட்ட பேருவளை பிரதேச சபையின் இரண்டாவது முஸ்லிம் தவிசாளராவார்.
புதிதாக பதவியேற்கவுள்ள தவிசாளர் பைஸான்நைஸர் பேருவளை பிரதேச சபையில் மக்களின் அமோக ஆதரவோடு மூன்று முறை உறுப்பினராக தெரிவாகி இன, மத, மொழி, மற்றும் கட்சி பேதமின்றி சேவை செய்து மக்கள் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதோடு, இம்முறையும் தேர்தலில் மக்களின் பெருவாரியான அன்பையும், ஆதரவையும், பெற்று எதிர்க்கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்போடும், ஆதரவோடும், தலைவராக தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.






(பேருவளை பீ. எம். முக்தார்)