அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் தூதுவர் சந்திப்பு; பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அண்மைய நிலைமை குறித்து விளக்கமளிக்க இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் விஜித ஹேரத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
போர் நிறுத்த அறிவிப்பை தான் வரவேற்பதாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதோடு , மோதல் அதிகரிப்பது பிராந்தியத்திற்கும் இலங்கை உட்பட அதற்கு அப்பாலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஈரான் தூதுவரிடம் விளக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.