2025 உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (26) முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, விண்ணப்பங்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய அறிவுறுத்தல்களின்படி நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.