மேலதிக நேர விவகாரம்; ரயில்வேயில் இன்று வேலை நிறுத்தம்
மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 24 மணி நேரம் வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுஜன ரயில்வே ஊழியர் சங்க செயலாளர் நதீரா மனோஜ் தெரிவித்தார்.
அவர்களின் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.