உள்நாடு

குருநாகல் மாநகர சபை வரலாற்றில் முஸ்லிம் ஒருவர் பிரதி மேயராக பதவியேற்பு.

குருநாகல் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஆனந்த சகபந்து மற்றும் பிரதி முதல்வர் எம். எம். அஸார்தீன் மொய்னுதீன் உத்தியோகபூர்வமாகப் பதிவேற்பு கடமைகளைப் பொறுப்பேற்கின்ற வைபவம் குருநாகல் மாநகர சபையில் நேற்று இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் குருநாகல் மாநகர சபை ஆணையாளர் அஜந்த குனவர்தன தலைமையில் இடம்பெற்றது. பிரதி அமைச்சர் நிமல் கருணாரத்ன சமயத் தலைவர்கள் பல்துறை சார் பொறுப்பு நிலை அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்றது.

குருநாகல் மாநகர முதல்வர் ஆனந்த சகபந்து மற்றும் பிரதி முதல்வர் அஸார்தீன் மொய்னுதீன் தத்ததம் அலுவலங்களில் சமயத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் அதிகாரபூர்வ அலுவலகங்களில் தங்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன் போது குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர பை உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதில் விசேட அம்சமாக குருநாகல் மாநகர சபையின் வரலாற்றில் முதல் தடவையாக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அஸார்தீன் மொய்னுதீன் அவர்களும் பிரதி முதல்வராகப் பதியேற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(மாவத்தகம நிருபர் இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *