சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதிப் பாலத்தை நவீன பாலமாக மீள அமைக்க நடவடிக்கை
சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாலத்தை நவீன மயப்படுத்தப்பட்ட பாலமாக அமைப்பதற்காக அதன் மதிப்பீட்டு அறிக்கையினை பெறுவதற்கான வேலைத்திட்டம் இன்று (25) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி.யின் வேண்டுகோளுக்கிணங்க, நெடுஞ்சாலை அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் உத்தரவுக்கமைய , வீதி அபிவிருத்தி அதிகார சபையினால், கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.வீ. அலியாரின் மேற்பார்வையில், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட். ஏ. எம் அஸ்மிரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொறியியலாளர் ஏ.எல். அப்துல் ஹக்கீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.வீ. முஹம்மது ஹாரித் மற்றும் ஏ.சீ.முஹம்மது நிசார் ஆகியோர் இன்று கள விஜயத்தினை மேற்கொண்டு, அதற்கான மதீப்பீடு செய்தனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பிரத்தியேக செயலாளர் எஸ். இம்தியாஸ் மற்றும் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஆரிப் மற்றும் எம்.ஐ. நஜீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இப்பாலமானது 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.





(எம்.எஸ்.எம்.ஸாகிர்)