கொய்யாவாடி பாடசாலையில் இடம்பெற்ற சின்னம் சூட்டும் நிகழ்வும், ஆசிரியர்கள் கௌரவிப்பும்
கற்பிட்டி கொய்யாவாடி முஸ்லிம் மகா வித்யாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும், உயர் தர கலைப்பிரிவு ஆசிரியர்கள் கௌரவிப்பும் பாடசாலையின் அதிபர் எம் எச் எம் நஜாத் தலைமையில் திங்கட்கிழமை (23) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய அதிகாரிகளான டபிள்யூ . எம்.டி.எம் திலகரத்ன, எல்.எஸ்.ஏ பெட்ரீஸீயா, புஸ்பகுமார, நுரைச்சோலை கிராம சேவகர் என் எம் நவ்பல்,
ஒய்வு பெற்ற முன்னாள் அதிபர் என் எம். ஐயூப்கான், அயல் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் டாக்டர் ஏ. றினோஸ் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாணவத்லைவர்களுக்கான சின்னம் அனிவித்தல் மற்றும், உயர் தர கலைப்பிரிவு ஆசிரியர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .





(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)