பேருவளை பிரதேச சபையின் தலைவராக பைஸான் நைஸர் வியாழனன்று பதவியேற்பு..!
பேருவளை பிரதேச சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பைஸான் நைஸர் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை (26/06/2025) காலை ஒன்பது மணிக்கு அழுத்கமை நகரில் உள்ள பிரதேச சபை அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். சர்வ மத தலைவர்கள்,
பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் அல்ஹாஜ் இப்திகார் ஜெமில், களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் அல்ஹாஜ் அம்ஜத், முன்னாள் மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்பொருளாளர் கலாநிதி அல்ஹாஜ் ரூமி ஹாசிம், முன்னாள் கழுத்தரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியால் நிஷாந்த, களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அஸ்லாம் சலீம், கழுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுணவர்தன, உட்பட பல கட்சிகளின் அரசியல்வாதிகள் பிரமுகர்கள் புத்திஜீவிகள் பலரும் நிகழ்வில் பங்குபற்ற உள்ளனர்.
தவிசாளர் பைஸான் நைஸர் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் தர்ஹா நகரில் பல இடங்களில் வரவேற்பளிக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக பதவியேற்கவுள்ள தவிசாளர் பைஸான்நைஸர் பேருவளை பிரதேச சபையில் மக்களின் அமோக ஆதரவோடு மூன்று முறை உறுப்பினராக தெரிவாகி இன, மத, மொழி, மற்றும் கட்சி பேதமின்றி சேவை செய்து மக்கள் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதோடு, இம்முறையும் தேர்தலில் மக்களின் பெருவாரியான அன்பையும், ஆதரவையும், பெற்று எதிர்க்கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்போடும், ஆதரவோடும், தலைவராக தெரிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
(பேருவளை பீ.எம்.முக்த்தார்)