சிறப்பாக நடைபெற்ற ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா..!
பேருவளை சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா 22/06/ 2025 பாஸியா ஜும்மா பள்ளிவாயலில் கலாபீட நிர்வாக சபை தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.சீ.எம் ஹம்ஸா தலைமையில் நடைபெற்றது.
கலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி மெளலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – யமனி – பீ ஏ)யின் வழிகாட்டலில், கலாபீட அதிபர் மெளலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் (முஅய்யிதி)யின் மேற்பார்வையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிதிகள் பைத் ஓதி கலாபீடத்திலிருந்து பள்ளிவாசலுக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 10 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
இவ்விழாவில் பிரதம அதிதகளாக அஷ்ஷைக் அஸ்ஸெய்யித் பஷீர் தங்கள் அவர்களும், கௌரவ அதிதிகளாக கலீபத்துல் குலபா அல்ஹாஜ் முஹம்மத் ஸுஹூர் பாரி அவர்களும்,அஸ்ஸெய்யித் அஹ்மத் ஷரீப் கோயா தங்கள் (மிஸ்பாஹி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விஷேட அதிதியாக சீனங்கோட்டை பள்ளிச் சங்க தலைவர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் முக்தார் அவர்கள் கலந்து கொண்டதோடு, பிரதம பேச்சாளராக புருனே சுல்தான் ஷரீப் அலி பல்கலைக்கழகத்தின் முன்னால் பீடாதிபதி கலாநிதி ஏ.எம். அபுவர்தீன் (அஸ்ஹரி) கலந்துகொண்டார்.
நிகழ்வில் விஷேட மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு அதிதிகள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
கலீபதுஷ் ஷாதுலிகளான மெளலவிகள் எம்.எம் ஸைனுல் ஆபிதீன் (பஹ்ஜி), எம் .ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மற்றும் மெளலவி எம் ஆர் எம் சில்மி (நூரி) , சீனன் கோட்டை பள்ளிச் சங்க உப தலைவர் அஷ்ஷைக் எம் எஸ் எம் ரில்வான் (நளீமி) , இணைச் செயலாளர் ஷிஹாப் ஹாஜியார்,முன்னால் பலஸ்தீன தூதுவர் பவ்ஸான் அன்வர், கலாநிதி நஜீப் ஹாஜியார் உட்பட,
சங்கைக்குரிய ஷேக்மார்கள்,கலீபாக்கள், உலமாக்கள், சீனங் கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீட நிர்வாக சபை உறுப்பினர்கள், இக்வான்கள், ஜமாத்தார்கள் , பெற்றோர்கள் என பெருந் ந.திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
(பேருவளை பீ . எம் முக்தார்)








