பாணந்துறை கவிதா வட்டத்தின் எட்டாவது கவியரங்கில் வெளியூர் கவிஞர்களும் பங்கேற்பு
பாணந்துறை கவிதா வட்டத்தின் எட்டாவது கவியரங்க நிகழ்வு கடந்த வாரம் பள்ளிமுல்லை அஸ்வர் ஹாஜியார் மண்டபத்தில் ஜீலான் மாணவி ஹுசைன்தீன் ரிஹ்லா தலைமையில் நடைபெற்றது.
பாகவத் தலைவர் கலைமதி யாசின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர்களான முன்னாள் அதிபர்களான கலைமதி யாசின், எஸ்.எச்.எம் நௌபல், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சத்தார், மஸீதா அன்சார், லைலா அக்ஸியா, மஸாஹிரா கனி, முனாஸ் கனி, கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், சித்திரக் கலைஞன் எம். நளீம், கொழும்பைச் சேர்ந்தவர்களான ராஜா நித்திலன், சிந்தனைப் பிரியன் முஸம்மில், மினுவன்கொட சிவக்குமார், சிவசண்முகம் மற்றும் வெலிப்பன்னை அம்னா அலி ஆகியோர் ‘பண்டிகைகள் எதற்காக’ எனும் தலைப்பில் கவிதைகள் படித்தனர்.
கொழும்பு மினுவன்கொட, வெலிப்பன்னை ஆகிய வெளியிடங்களில் இருந்தும் கவிஞர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாக அமைந்தது. ஏ.எல்.எம். அஸ்வர் கருத்துரையோடு நன்றியுரையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மண்டபத்தின் முன் எடுத்துக்கொண்ட படத்தையே இங்கு காண்கிறீர்கள்.
(சப்ரினா சத்தார்)