உள்நாடு

சாஹிரியன் லெஜென் ப்ரீமியர் லீக் – 2025

சாஹிரியன் லெஜென் ப்ரீமியர் லீக் – 2025 கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஆரம்பமாவுள்ள நிலையில் தொடருக்கான ஊடகவியலாயர் மாநாடு நேற்று (22) கல்முனை சாஹிரா கல்லூரி எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

Organizing Team Md Legends 92/95 இனால் ஏற்பாடு செய்யப்பட்ட தெளிவூட்டல் நிகழ்வில் பின்வரும் அம்சங்கள் தெரிவிக்கப்பட்டன.
● குறித்த நிகழ்வு கால தாமதம் இன்றி சரியான நேரத்திற்கு ஆரம்பிக்கப்படும்.
● போட்டித் தொடர் சம்பந்தமான தெளிவூட்டல்கள் இடம்பெறும்.
● போட்டித் தொடர் ஒழுக்க விதிகள், விளையாட்டு விதிகள் தெளிவூட்டப்படும்.

எனவே குறித்த நிகழ்விற்கு தவறாமல் பங்கு பற்றுமாறு ஏற்பாட்டுக்குழுவினரால் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

மேலும் இங்கு தெரிவித்ததாவது,

ஒவ்வெரு அணியில் இருந்தும் ஊயிவயin, ஆயயெபநச உடன் மொத்தமாக 03 நபர்கள் மட்டும் பங்கு பற்ற முடியும்.

மேற் குறித்த நபர்களால் வர முடியாமல் போகும் சந்தர்ப்பம் இருந்தால் அந்த அணி சார்பாக வேறு 03 நபர்கள் பங்குகபற்ற முடியும்.

போட்டித் தொடருக்கான வீரர்களின் விண்ணப்பப் படிவம், தொடரில் பங்கு பற்றுவதற்கான கட்டுப் பணத் தொகை Rs. 10,000/-

பங்குபற்றவுள்ள அணிகளில் பங்கு பற்றும் நபர்களின் விபரங்களை சுற்றுத்தொடர் ஏற்பாட்டுக் குழுவினரை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எம். ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *