ஈரானின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமை உண்டு; கட்டார்
அமெரிக்க தளங்கள் மீதான ஈரானிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமையுள்ளது என்று கட்டார் வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை கட்டார் வெளியுறவு அமைச்சரகம் கண்டித்துள்ளதோடு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் இந்தத் தாக்குதல் கட்டாரை உள்ளிளுத்துள்ளதாக கருத்துத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்தாக்குதலில் உயிரிழப்பு இல்லை என்று கட்டார் வெளியுறவு அமைச்சரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், கத்தாரில் உள்ள அமெரிக்க தளமான அல்-உதெய்த் விமானத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை கத்தாரின் வான்பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.