சிறந்த தமிழ் பத்திரிகைக்கான விருது தினகரனுக்கு..!
ASIA MIRACLE -2025 மாபெரும் விருது விழா நேற்று மாலை (23/06/2025) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் இலங்கையில் இந்த வருடத்திற்கான சிறந்த தமிழ் பத்திரிகையாக தினகரன் நாளிதழ் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது
விருதினை தினகரன். தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தொ. செந்தில்வேலவர் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் லேக் ஹவுசின் சகோதர பத்திரிகைகளான டெய்லி நியூஸ் சிறந்த கட்டுரைகள். மற்றும் சிலுமின சிங்கள ஞயிறு பத்திரிகையின் சிறந்த கட்டுரைகளுக்காக சிறப்பு விருதுகள் கிடைக்கப்பெற்றது.





