Monday, August 11, 2025
Latest:
உலகம்

இஸ்ரேலை எச்சரித்துள்ள சர்வதேச அணுசக்தி நிலையம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை IAEA உறுதி செய்ய முடியும் என்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது ஒரு பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் IAEA இன் பணிப்பாளர்  ரஃபேல் குரோசி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் அவர் விளக்கமளிக்கையில், ஃபோர்டோ மற்றும் எஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், புஷேர் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் மிக அதிக கதிர்வீச்சு வெளியேறும் என்றும் எச்சரித்தார். இது பல நூறு கிலோமீட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தார்.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்துள்ளன. இதுவரை பொதுமக்களை பாதிக்கும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அது நிகழலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *