சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா ஒன்றுகூடல்
ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தூதரகத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், இலங்கையில் வசிக்கும் சவூதி அரேபிய பிரஜைகளும் இதில் பங்கேற்றனர்.




