உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *