Sunday, July 27, 2025
Latest:
உள்நாடு

பாணந்துறை பிரதேச சபையில் எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள்..!

பாணந்துறை பிரதேச சபைக்கு எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளூராட்சி வட்டாரங்களிலிருந்து தெரிவாகியுள்ளதுடன் கட்சிகளின் பட்டியல் உறுப்பினர்களாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

பாணந்துறை பிரதேச சபையின் கெசல்வத்த ஹேனமுல்ல இரட்டை வட்டாரத்திலிருந்து தேசிய மக்கள் சக்தி சார்பில் எம்.எப்.எம்.பயினாஸ், தொட்டவத்தை வட்டாரத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன சார்பில் இபாஸ் நபுஹான் மற்றும் வத்தல்பொல வட்டாரத்திலிருந்து ஏ.எச்.எம்.முன்ஸிர், அம்பலந்துவ வட்டாரத்திலிருந்து எம்.எஸ்.எம்.ரம்ஸான் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

எம்.என்.எம்.தாஹிர்பாஸி-ஐக்கிய மக்கள் சக்தி, எம்.எப்.எம்.நஸ்மி-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஏ.டபிள்யு.எம்,பஸ்லூன்-சர்வஜன பலய மற்றும் எஸ். ஏ.எம்.அஸ்ஹார்-ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் மேலதிக பட்டியல் உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்களான ஹேமந்த பெர்னான்டோ மற்றும் நீல் சுனேத்ரலால் பெர்னான்டோ ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன மற்றும் சர்வஜன பலய கட்சிகளின் பட்டியல் உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.இதே வேளை,முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன சார்பில் களமிறங்கி தொட்டவத்தை வட்டாரத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.முன்தஸிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *