ஒழுங்கீனமான நடத்தை; அம்பிட்டிய சுமன தேரர் கைது
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பீடாதிபதி அம்பிட்டியே சுமனரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒழுங்கீனமான நடத்தை சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உஹனா பொலிஸாரினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொலிஸ் நிலையத்திற்குள் குழப்பமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.