முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் தீவிரம்
முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் சம்பவம் நேற்று மாலை (20) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரிய வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)