உலகம்

மினாவில் இலங்கை ஹாஜிகள் தங்கும் இடங்களைப் பார்வையிட்ட ஹஜ் குழு அதிகாரிகள்

2025 Hajj Pilgrims
இம்முறை ஹஜ்ஜிக்கா வரும் இலங்கை ஹாஜிகளை மினாவில் தங்க வைக்கப்படவுள்ள இடங்களை இலங்கையில் இருந்து வந்த ஹஜ் குழு உறுப்பினர் அஸுர் ஹாஜி, இலங்கை வக்பு சபை உறுப்பினர் மாஹில் டூல் ஹாஜி முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரி ஏ.எஸ்.எம்.ஜாவித் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் கொன்சியுலர் ஜெனரல் திருமதி மபுஷா லாபிர் , ஏற்பாடுகளுக்கான தூதரகத்தின் உயர் அதிகாரி Dr. அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (19) சென்று பார்வையிட்டனர்.

மேலும் ஹாஜிகளுக்கு உணவு வழங்க பொறுப்பான ஜலால்டீன் ஹாஜி உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.
மினாவில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விரைவாக இடம் பெறுவதையும் அவதானிக்க முடிந்தது.

அத்துடன் பல நாடுகளில் இருந்தும் பெருமளவான ஹாஜிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள் மேலும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ஹாஜிகளை பல இடங்களில் சோதனை செய்கிறார்கள் உரிய ஆவணங்களை சரியாக தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

(ஏ.எஸ்.எம். ஜாவித்
மக்கா- மினாவில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *