சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து; 7 பேர் காயம்
சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் உள்ள இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (21) காலை ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிகொடவெல ரயில் கடவை மூடப்பட்டிருந்த வேளையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அந்நேரத்தில், ஒரு கொள்கலன் லொறி வந்து நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது, பின்னர் வேன் கடந்து சென்று ஒரு பவுசர் மீது மோதியதால் வேன் பலத்த சேதமடைந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.