கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டியில் கிராம அபிவிருத்தி வேலைத்திட்ட கலந்துரையாடல்
கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திட்டமிடுவது தொடர்பான கலந்துரையாடல் முதல் கட்டமாக கற்பிட்டி குறிஞ்சிப்பட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவில் செவ்வாய்க்கிழமை (20) பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ .ஆர். எம். அஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கண்டக்குளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் எம்.டீ. இப்ஹாம், கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராமத்தின் தொண்டர் நிறுவனங்கள், சமூகத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது 2025 தொடக்கம் 2029 வரையான ஐந்து வருட கால செயல் திட்ட முன்மொழிவுகள், பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டு வேலை திட்டத்தின் ஊடாக மேற்கொள்ப்பட்டது இவ்வேலைத் திட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை இனம் கண்டு கலந்துரையாடியதுடன் அதன் அடிப்படையில் ஐந்து வருட திட்டத்தின் மேற்குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்கள் அதன் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துவதற்க்கும் தீர்மானிக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் கிராம மட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட முதல் அமர்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)