2024 க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளின் படி, புத்தளம் மாவட்டம் முதலிடம்
க.பொ.த உயர் தரப் பரீட்சை 2024 பெறுபேறுகளின் படி, பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப் பெற்றவர்களின் அதி கூடிய வீதத்தைப் பதிவு செய்து புத்தளம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலை பரீட்சார்த்திகளின் சித்தி வீதத்தின் படியும் அனைத்து பரீட்சார்த்திகளின் சித்தி வீதத்தின்படியும் புத்தளம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் 5869 பாடசாலைப் பரீட்சாரத்திகள் 2024 உயர் தரத்திற்கு தோற்றியுள்ளனர். அவர்களில் 4248 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமையைப் பெற்றுள்ளனர். இது 72.38 வீதமாகும்.
அனைத்துப் பரீட்சார்த்திகளைப் பொறுத்தவரையில்7573 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். அவர்களின் 5118 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப் பெற்றுள்ளனர். இது 67.58 வீதமாகும்.
புத்தளத்தை அடுத்து பாடசாலைப் பரீட்சார்த்திகள் அடிப்படையில், 71.72 வீத சித்தியுடன் கொழும்பும் 71.72 வீத சித்தியுடன் மன்னார் மாவட்டமும் பெற்றுள்ளன.
அனைத்துப் பரீட்சார்த்திகளைப் பொறுத்தவரையில் புத்தளத்தை அடுத்து யாழ்ப்பாணம் 67.54 வீதத்துடன் இரண்டாம் இடமும், மன்னார் 67.35 வீத சித்தியுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)