வட மத்தியில் ஹெப்பி ஸ்கூல் நிகழ்வு
வடமத்திய மாகாணத்தில் ” ஹெப்பி ஸ்கூல் ” இன் நேரடி பக்க திருப்ப நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் (20) மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலைகளில் கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தொடர்பில் அதிபர்களுக்கு விளக்கம் ஊட்டப்பட்டது. அறிவுறைகள் , பாடல்கள்,தெரு நாடகங்கள், காணொளிகள் , குறும்பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஊக்குவித்தல் ,கழிவுகளை குறைத்தல் மற்றும் தார்மீக விழும்பியங்களை வலுப்படுத்தல் ஆகிய வற்றில் குறிப்பாக முக்கியத்துவம் அளித்து கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை மாவட்டத்தில் எவ்வாறு செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
குறித்த முறைகள் மூலம் பாடசாலை மாணவர்களின் மனப்பான்மையை வளர்த்து சமூகத்தில் நுழையும் போது நல்ல மனப்பான்மைகள் நிறைந்த நற்பண்புகள் நிறைந்த திறன்கள் நிறைந்த மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் இரக்கம் நிறைந்தவர்களாகவும் இருக்கும் நல்ல குடிமக்களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.
இந்நிகழ்வில் மாகாண பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயசிங்க பிரதம அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.எஸ்.கே.ஜயலத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)