முதலைப்பாளி அப்துல்லா அல் சப்ரான் பள்ளிவாசலுக்கு வுழு செய்யும் டெப் வசதி செய்யப்பட்டது
கற்பிட்டி முதலைபாளி அப்துல்லாஹ் அல் சப்ரான் பள்ளிவாசலுக்கு வுழு செய்யும் டெப் வசதிகள் சுவனத்து பாதைகள் வேலைத்திட்டத்தின் ஊடாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ யின் புத்தளம் மாவட்ட பணிப்பாளரும், சமூக சேவையாளருமான முஜாஹித் நிஸாரின் முயற்சினால் வை.எம்.எம்.ஏ ஸ்ரீலங்கா ஒருங்கிணைப்பில் கனேடிய இலங்கை வாழ் முஸ்லிம் மகளிர் அமைப்பின் பூரண அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட வுழு செய்யும் டெப் வசதிகள் செவ்வாய்க்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.
இதில் பள்ளி நிருவாகத்தின் தலைவர் சப்ருல்லா, ஜனாப் நவாப், பொருளாளர் ஜனாப் சாதிக், பள்ளி இமாம் மௌலவி ஆதிர், இணைப்பாளர் மௌலவி நஜாத் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)