உள்நாடு

சீனன் கோட்டை பாஸிய்யா பள்ளிவாசலில் 134ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்

‘ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (றழி) அவர்களின் 852ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் 134ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம் 17.05.2025 கலீபத்துஷ் ஷாதுலிகளான அல் ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல்ஹஸன் (நளீமி) மௌலவி எம்.ஐ.எம். றபீக் (பஹ்ஜி) மௌலவி , எம்.எம் ஸைனுல்ஆப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சீன்கோட்டை பள்ளிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி மனாகிப் தமாம் மஜ்லிஸில் காலி அலிய்யா சட்டக்கல்லூரி பணிப்பாளரும் காலி மாவட்ட உலமா சபைத் தலைவருமான அல் உஸ்தாத் சங்கைக்குறிய அல் உஸ்தாத் கலீபதுல் குலபா மௌலவி எம். இஸட். முஹம்மத் ஸ{ஹ்ர் (பாரி), விஷேட உரையாற்றினார்.

அஸர் தொழுகையைத் தொடர்ந்து மனாகிபுஷ் ஷாதுலி மஜ்லிஸம் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து வலீபா யாகூதிய்யாவும் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஹழரா மஜ்லிஸம் துஆப் பிராத்தனையும் மார்க்ச் சொற்பொழிவும் இடம்பெற்றது.

கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி அஸ் ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (முர்ஸி) மௌலவி பிஷ்ர் அஜ்வாத் (பஹ்ஜி) மௌலவி எம்.எஸ்.எம் பைரூஸ் (பஹ்ஜி) மௌலவி எம்.ஐ.எம் பாரூக்; (மக்கி) மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) மற்றும் கலீபதுல் அரூஸியதுல் காதிரி மௌலவி முஹம்மத் முஸ்தகீம் (நஜாஹி) சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட மௌலவி எம். அஸ்மிகான் (முஅய்யிதி), சீனன் கோட்டை பள்ளிச்சங்க உறுப்பினர்கள் உட்பட ஸாதாத்மார்கள், உலமாக்கள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள், சீனன் அரசியல்வாதிகள் தென் மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளில் ஷாதுலிய்யா தரீக்காவை பின்பற்றும் இஹ்வான்கள் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 9 நாட்கள் ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸ் நடைபெற்றதோடு தலை சிறந்த மார்க்க அறிஞர்களினால் பல்வேறு தலைப்புக்களில் மார்க்க சொற்பொழிவும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு இறுதியில் சீனன் கோட்டை பள்ளிச்சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா நிறைவேற்று உருப்பினருமான அஷ் ஷெய்க் அல் ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) நன்றியுரை நிகழ்த்தினார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *