தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் நாற்பது சதவீதத்தினரின் பெயர்கள் இன்னும் அந்தந்த அரசியல் கட்சிகளால் ஒப்படைக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சபைகளில் உத்தியோகபூர்வ பதவிக்காலம் தொடங்குவதற்கு முன்னர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் வேட்பாளர்களின் பெயர்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.