உள்நாடு

ஒக்ஸ்போர்ட்டில் முதுமானி கற்கையை நிறைவு செய்த இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர் இன்சாப்

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களினது புத்திரான இன்சாப் பாக்கீர் மாக்கார் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இராஜதந்திர கற்கையில்( Diplomatic Studies) தனது முதுமானி கற்கையை நிறைவு செய்தார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 16ஆம் திகதி நடந்த பட்டமளிப்பு விழாவில் முதுமானி கற்கைக்கான பட்டச்சான்றிதழ் பத்திரம் இவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கற்கையைத் தொடர்ந்த காலப்பிரிவில் ஒக்ஸ்போர்ட் யூனியனில் (Oxford Union) பட்டதாரி அதிகாரியாகவும், இலங்கை சங்கத்தின் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.

National Youth Model United Nations இன் ஸ்தாபித்த இவர், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இளைஞர் பிரதிநிதியாக (Official Youth Delegate of Sri Lanka to the United Nations-2018-2019) கடமையாற்றியுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகராக பணி புரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *