காயல் மக்பூலிற்கு இலக்கியச்சுடர் விருது
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் பொன்விழா ஆண்டில் திருச்சி எம். ஐ. இ. டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 2025 மே 9, 10, 11 தேதிகளில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலினினால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டின் நிறைவு விழாவில் பொற்கிழியுடன் கூடிய ‘இலக்கியச் சுடர்’ விருது எழுத்தாளரும் பேச்சாளருமான காயல் மகபூப்பிற்கு வழங்கப்பெற்றது.
அதனை சமுதாயத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதி அரசர்கள் கே. என். பாஷா, ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் வழங்கினர். இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் சே மு மு முகமதலி, பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் மு. இ. அகமது மரைக்காயர், பொருளாளர் யுனிவர்சல் எஸ்.எஸ். ஷாஜஹான் ஆகியோர் உடன் இருந்தனர்.