இந்திய, பாகிஸ்தான் மோதலின் எதிரொலி; ஆசியக் கிண்ண தொடரிலிருந்து விலகும் இந்தியா
எதிர்வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலக இந்திய கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடிக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்ததாலும், இந்தியா ஒபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்ததாலும், இரு நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் சமீபத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தற்போதைய ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக பணியாற்றுவதால், ஆசிய கிண்ண தொடரில் இருந்து இருந்து விலகுவது குறித்து இந்திய கிரிக்கெட் சபை பரிசீலித்துள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் சபையின் இந்த முடிவால் ஆசிய கிரிக்கெட் சபை ஆசிய கிண்ண தொடரை நடத்தாமல் கைவிடக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழ்நிலையில், ஆசிய கிண்ணத்தின் எதிர்காலம் நிச்சயமாக இருண்ட நிலைக்குச் சென்றுள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.