ஐ.ம.சக்தி – ஐ.தே. கட்சி இணைவதில் இணக்கப்பாடு
தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிர்வாகங்களை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் இணக்கப்பாட்டை கண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.