விசாரணைக் குழு முன் ஆஜராகும் தேசபந்து தென்னக்கோன்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முறைகேடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழு இன்று (19) முதல் தனது விசாரணையைத் தொடங்கவுள்ளது.
குறித்த குழுவானது கடந்த சில வாரங்களாக பாராளுமன்ற வளாகத்தில் கூடி முதற்கட்ட விசாரணைகளை நடத்தியது.
அதன்படி, தேசபந்து தென்னகோனுக்கு விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, தேசபந்து தென்னகோன் முதல் முறையாக விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளதாக பாராளுமன்றத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2:00 மணிக்கு பாராளுமன்றக் குழு அறை எண் 8 இல் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.