உள்நாடு

கல்வங்குவ விபத்தில் ஊடகவியலாளர் பலி

ஹபரணை திருகோணமலை பிரதான வீதியில் 120 வது மைல்கல் பகுதியில் அனுராதபுரம் ஹபரணை கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிலுடன் வாகன மொன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *