இம்முறையும் புத்தளத்தில் பல்கலைக்கழக வழிகாட்டல் நிகழ்வு
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பு மற்றும் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி நிர்வாகம் ஆகியன ஒன்றிணைந்து இம்முறை புத்தளம் நகரில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்றை சனிக்கிழமை (17) புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடாத்தியது.
இந்த நிகழ்விற்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பொது வழிகாட்டல் நிகழ்வு மற்றும் துறைசார் வழிகாட்டல் நிகழ்வு என இரு கட்டங்களாக இந்த நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
நிகழ்வின் பொது வழிகாட்டல் வளவாளர்களாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரும், பிரபல ஊக்குவிப்பு பேச்சாளரும், தொழில் வழிகாட்டல் ஆலோசகரமான எம்.ஆர்.எம்.ஷவ்வாபும், துறைசார் வழிகாட்டல் நிகழ்வுகளை அந்தந்த துறைசார் வளவாளர்களாக புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரும், கொழும்பு பல்கலைக்கழக கணக்கியல் துறையில் சிறப்பு பட்டம் பெற்றவரும், திறந்த பல்கலைக்கழக புத்தளம் கல்வி நிலையத்தின் வருகைதரு விரிவுரையாளருமான திருமதி ஆர்.ரப்பத், புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் பிரதித் தலைவர்களும் ஒருவரான தற்பொழுது வயம்ப பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை தொடரும் மற்றும் ஸீ.ஏ.பாடநெறியை தொடர்பவருமான செல்வி எம்.ஏ.அம்ஜிதா, புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் நிர்வாகக் குழுவில் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படும் எம்.ஹனான் , மற்றும் புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் அங்கத்தவர்களில் ஒருவரும், களனி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை தொடர்பவரும், ஸீ.ஏ பாட நெறியை தொடர்ந்து கொண்டிருப்பவருமான செல்வி இம்ரத் மர்வா மற்றும் புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒருவரும், வயம்ப பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை தொடர்பவரும் ஸீ.ஏ. பாடநெறியை தொடர்பவருமான செல்வி.பீ.என்.எப்.சப்னா ஆகியோர் செயற்பட்டனர்.






(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)