பணிப் பகிஷ்கரிப்பு நிறைவு; வழமை போல் ரெயில் சேவைகள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது.
இன்று முதல் ரயில் சேவைகள் வழமை போன்று தொடரும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் கடந்த 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, தினசரி ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், நேற்றும் நேற்று முன்தினமும் இரவு அஞ்சல் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்தார்.