40 – 50 நாட்கள் யுத்த நிறுத்தம்,10 கைதிகளை விடுவிக்க பேச்சு, இரு வாரங்களில் உணவு, விநியோக நிலையங்கள் அதிகரிப்பு; டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை
காசா மக்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் செய்தல் உயிருடன்
உள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுதலை செய்தல் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தல்
போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 40-50 நாட்களைக் கொண்ட இஸ்ரேல் ஹமாஸ் சமாதான உடனான புதிய உடன்படிக்கை ஒன்று தொடர்பில் பேச்சுவார்த்தை இடம் பெற்று வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவுரைக்கு இணங்க
இப்பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் இதற்கிணங்க
தற்போது உயிருடன் உள்ள 10 பணயக் கைதிகளை விடுதலை செய்வவும் அதற்கு பகரமாக பலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்யவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் காசா மக்களுக்கான உணவு மற்றும் மனிதநேய உதவிகளை வழங்கவும் உதவிகள் வழங்கப்படும் மத்திய நிலைங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இத்திட்டத்தின் கீழ்
இஸ்ரேலின் அனுமதி வழங்கப்படும்.
ஆனால் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளில் இஸ்ரேலிய இராணுவம் நேரடியாக ஈடுபட
மாட்டாது எனவும் ஆனால்
கண்காணிப்பு நடவடிக்கைகள் ஈடுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நிலையங்களை அமைப்பதற்கு இரண்டு வார காலம்
செல்லும் எனவும் இக்கால பகுதிக்குள் காசா மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பூர்த்தி செய்யவும்.இரு தரப்புகளுக்கு
இடையில் நடைபெற்ற பேச்சுக்களில்
இணக்கம் காணப்பட்டு
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(ஏ.ஏ.எம். பாயிஸ்)