இறக்கமாம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்டத்தின் இறக்கமாம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (16) வெள்ளிக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் ரஸ்ஸானின் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் மஞ்சுள ரத்நாயக்கவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினறும் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய ஏ. ஆதம்பாவா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரும் தேசிய மக்கள் சக்தியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் அலிசப்ரி மற்றும் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக செயலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)