அரச உதவியுடன் கஹட்டோவிட்ட வட்டாரம் முழுமையான அபிவிருத்தி; அத்தனகலை பிரதேச சபை உறுப்பினர் இன்ஷாப்
கஹட்டோவிட்ட வட்டாரத்தை முன்னேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் அரச உதவியுடன் முன்னெடுக்கப்படுமென பிரதேச சபை உறுப்பினர் இன்ஷாப் தெரிவித்தார்.
கஹட்டோவிட்ட வட்டாரத்தை 1776 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் இன்சாப் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்பாட்டில் ஓகொடபொளையில் அண்மையில் இடம்பெற்ற கஞ்சி வினியோக நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது கஹட்டோவிட்ட வட்டாரத்தை முன்னேற்றுவதற்காக நாம் வழங்கிய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.இதற்காக அனைவரும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட பட்டியல் வேட்பாளர் ஜவாத் கஹட்டோவிட்ட வட்டாரத்தை முன்னேறிய கிராமமாக மாற்றியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.