பலாகல பிரதேச சபைக்கு முஹம்மத் சிராஜ் தெரிவு
பலாகல பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தியில் பளளுவெவ வட்டாரத்தில் போட்டியிட்ட மொஹொம்மது சிராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
பளளுவெவ ,நெல்லியகம மற்றும் திக்கெந்தியாவ ஆகிய கிராம சேவகர் பகுதிகளை மையமாக கொண்டு போட்டியிட்டு 699 வாக்குகளைப் பெற்று பலாகல பிரதேச சபைக்கு நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரின் வெற்றிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அண்மையில் நெல்லியகம கிராமத்திற்கு விஜயம் செய்து மக்களை சந்தித்து முசாபா செய்து கொண்டதுடன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)